அரியாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்.கே. என்.நேரு திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், பூலாங்குளத்துப்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு சார்பில் ரூபாய் 799 இலட்சம் மதிப்பீட்டில் அய்யாக்கவுண்டம்பட்டி சாலையில் அரியாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்கு இன்று (25.01.2023) அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம் கருப்பையா, நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் விஜயலட்சுமி, கோட்ட பொறியாளர் வடிவேல், உதவி கோட்ட பொறியாளர் சிவசெல்வி, உதவி பொறியாளர்கள் முத்துக்குமரன், வடிவேல் குமரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.