சாலையை கடக்க முயன்றவர் மீது லாரி மோதியதில் படுகாயம்

0 301
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானாவில் சாலையை கடக்க முயன்றபோது லாரி மோதிய விபத்தில் இரண்டு கால்களும் முறிந்து படுகாயம் அடைந்தார்.

லால்குடி அருகே அன்பில் மங்கம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான சத்தியமூர்த்தி.இவர் லால்குடி பேருந்து நிறுத்ததிலிருந்துசேலம் பேருந்து நிறுத்தம் செல்வதற்காக டோல்கேட் ரவுண்டானாவை கடக்க முயன்றார். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாபேட்டை அவில்தாரிசத்திரம் பகுதியைச் சேர்ந்த 48 வயதான ராஜா என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சத்தியமூர்த்திக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.