உளுந்து விதைகள் – இடுபொருட்கள் முழு மானியத்தில் வழங்கல்
திருச்சி, ஜன.25 திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராம ஊராட்சியில் மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயராணி வழிகாட்டுதலின்படி, சிறுகமணி கே.வி.கே மூலம் உளுந்து பயிரில் தொகுப்பு முன்னிலை செயல் விளக்க திடல் அமைக்கும் பொருட்டு வம்பன் 11 ரக உளுந்து விதைகள் மற்றும் இடுபொருட்களை முழு மானியத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பானு முருகேசன் முன்னிலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பேராசிரியர் புனிதவதி, முனைவர் மாரிமுத்து மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் காமாட்சி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் செய்திருந்தார்.