கிணற்றில் மூழ்கி பலியான சிறுவன் குடும்பத்திற்கு அமைச்சர் அன்பில்மகேஸ் நேரில் ஆறுதல்

0 259
Stalin trichy visit

திருச்சி, ஜன.25 திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில்மில் பர்மா காலனியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ஜெகன்நாத் (10). இவர் காட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் விடுமுறை தினமாக இருந்ததால் அருகிலுள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக பூங்காவிற்கு அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்தார் இந்த செய்தியை அறிந்ததும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இறந்த சிறுவனின் இல்லத்திற்குச் சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி சிறுவனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மதிவாணன், மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன், காட்டூர் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், வார்டு மாமன்ற உறுப்பினர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.