ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரம் பூனாம்பாளையம் ஊராட்சி ராசாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 26.01.23 குடியரசு தின விழா பள்ளி தலைமை ஆசிரியர் பேபிராணி தேசியக்கொடி ஏற்றி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மணிமேகலை முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகளின் பாதுகாப்பு போதைப் பொருள் தடுப்பு பள்ளிக்கு செல்லாத அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் கல்வியின் அவசியம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் சமுதாயத்தின் பங்கு குறித்தும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மண்ணச்சநல்லூர் கிராம மேம்பாட்டு மைய இயக்குனர் ராஜு குழந்தைகள் சத்தான ஆரோக்கியமான சுகாதார உணவுகளை உட்கொள்வதன் அவசியம் நன்மைகள் போதைப்பொருளால் ஏற்படும் உடல் அளவில் மனளவில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து வாழ்த்துரை வழங்கினார்.பள்ளி ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார். பூனாம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கிராமசபை கூட்டத்தில் குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு கலந்து கொண்டு மூவலூர் இராமாமிர்தம் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தின் நோக்கம் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை சட்டம் குறித்து பேசினார். தொழுநோய் குறித்த உறுதிமொழி கிராம சபை கூட்டத்தில் அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. கூட்டத்தில் துறை சார்ந்த பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.