சேவை சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் குடியரசு தின விழா
திருச்சி மாவட்ட சேவை சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் தேசத்தின் 74 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் மிகவும் எளிமையான முறையில் மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.!
கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் வழக்கறிஞர் திருச்சி திலீப் ஐயாரப்பன், யோகா விஜயகுமார், ஆர் கே ராஜா , கோவிந்தராஜ், கோவிந்தசாமி ,செல்லக்குட்டி , நவீன், சரவணன், சண்முகம், எஸ்கே இந்தியா, கதிரவன்,
மிளகு பாறை திருப்பதி, கருமண்டபம் ராஜி, டேவிட் சகாயராஜ் சேகர். ரமணன் மற்றும் தேசிய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்!

கூட்டத்தில் வெளிநாட்டவர்க்கும் இஸ்லாமிய பெண்மணிகளுக்கும் மற்றும் பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் தேசிய கொடிகளையும்! லட்டு மற்றும் மரக்கன்றுகளையும்! வழங்கினர்.