கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : தேசிய கல்லூரிசாம்பியன் பட்டம்

0 303
Stalin trichy visit

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி லீக் முறையில் நடைபெற்றது.
காலிறுதி போட்டிகளில் திருச்சி மற்றும் தஞ்சை மண்டல கல்லூரிகள் போட்டியில் விளையாடின. நான்கு கல்லூரி அணிகள் பங்கேற்ற அரையிறுதி போட்டியில் திருச்சி தேசிய கல்லூரி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடம் பிடித்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஜோசப் கல்லூரி திருச்சி இரண்டாவது இடத்தையும், திருவாரூர் திருவிக கல்லூரி மூன்றாவது இடத்தையும், ஜே ஜே கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதுக்கோட்டை கல்லூரி நான்காவது இடத்தையும் பெற்றனர்.

பட்டத்தை வென்ற திருச்சி தேசிய கல்லூரி வீரர்களை கல்லூரி செயலர் ரகுநாதன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பிரசன்ன பாலாஜி மற்றும் தலைமை பயிற்சியாளர் பிரசாத் ஆகியோர் பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.