உலகக் கல்வி தினத்தை முன்னிட்டு பேரணி
வெங்கங்குடி, ஜனவரி 28 – உலகக் கல்வி தினம் உலம்தோறும் ஜனவரி 24 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டி வெங்கங்குடி ஊராட்சியில் நாளந்தா வேளாண் கல்லூரி முதல்வர் சேகர் மற்றும் வேளாண் விரிவாக்கத் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர். B. குணா வழிகாட்டுதலின்படி நாளந்தா வேளாண் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள், கிராமத்தில் தங்கிப் பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் பேரணி நடத்தினர். இதனை வெங்கங்குடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் B. சுந்தர் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். இதில் வெங்கங்குடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியின் மாணவர்கள் மற்றும் மாணவிகள் கல்வியின் முக்கித்துவத்தை உணர்த்தும் வகையில் வாக்கியங்கள் இடம்பெற்றுள்ள பதாகைகள் ஏந்தியபடி பங்கேற்றனர்.