தெற்காசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற லால்குடி வீரர்…

0 285
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த தடகள வீரர் தெற்காசியா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றார்.

லால்குடியை சேர்ந்தவர் தடகள வீரர் 22 வயதான சாகுல் ஹமீது. இவர் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறார். தெற்காசியா அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பூடானில் நடந்தது இதில் இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் நேபாளம் ஸ்ரீலங்கா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர் இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் மூலம் லால்குடி சிறுகையூர் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் சாகுல் ஹமீது போட்டியில் கலந்து கொள்ள அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நிலவிய கடும் குளிரால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் மனம் தளராத சாகுல் ஹமீது தன்னம்பிக்கையுடன் போட்டியில் பங்கேற்று ட்ரிபில் ஜம் போட்டியில் 14.05 மீட்டர் தாண்டி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு முன்னதாக கோவா மற்றும் பூடானில் நடைப்பெற்ற போட்டிகளில் இவர் நீளம் தாண்டுதலில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் அவருக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் முஹமது ராஜா, செயலாளர் அஷ்ரப் அலி,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக செயலாளர் முகமது இலியாஸ், துணைத் தலைவர் முஸ்தபா, துணை செயலாளர் ரம்ஜான் அலி ஆகியோர் வரவேற்றனர். தமிழகத்துக்கும், நாட்டுக்கும் பெருமை தேடித்தந்த அவருக்கு வேலைவாய்ப்பினை வழங்கி மத்திய மாநில அரசுகள் உதவிட வேண்டும். மேலும் சிறந்த வழிகாட்டுதல் கிடைத்தால் விளையாட்டு துறையில் என்னால் பெரிய அளவுக்கு சாதிக்க முடியும் என்றார்.

இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற சாகுல் ஹமீது நேற்று லால்குடிக்கு திரும்பினார். அவருக்கு லால்குடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.