நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்தில் கையெழுத்து இயக்கம் ஏ.ஐ.டி.யூ.சி கூட்டத்தில்

0 461
Stalin trichy visit

பிப்ரவரி 1ம் தேதி முதல் நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்து முழுவதும் கையெழுத்து இயக்கம்

அனைவருக்கும் வணக்கம்

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சிகட்டடத் தொழிலாளர் சங்கம் மற்றும் சிபிஐ மாதர் சங்கம் நாச்சிகுறிச்சி பஞ்சாயத்தில் உள்ள அனைத்து அமைப்பின் கிளையின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று (29.1.2023)  மாலை 4.30 மணி அளவில் நாச்சி குறிச்சியில் மணிகண்டம் ஒன்றிய துணைத் தலைவர் N பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாவட்டத் தலைவர்  MR முருகன் கலந்து கொண்டு கூட்டத்தை வழிநடத்தினார், இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் மணிகண்டம் ஒன்றிய செயலாளர்  S முத்துலெச்சுமி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய பொருளாளர் KN ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டார் கூட்டத்தில் ஜோதிநகர் S முத்தழகு, நாடார்தெரு D நிர்மலா,பாரதிநகர் P குமரேசன், இனியானூர்M பூபதி, நாச்சிக்குறிச்சி B வித்யா, நாச்சிகுறிச்சி (2) A அம்சவள்ளி, கற்பகம், பாப்பாத்தி, சக்தி, இந்திரா ,கோமதி, விஜயக்குமார், விஜயலெட்சு,மி செல்வி, வெள்ளையம்மாள், சுசிலா, தனலெட்சுமி உள்ளிட்ட பல்வேறு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு கூட்டத்தில் நாச்சிகுறிச்சி பஞ்சாயத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் சாக்கடை மின்விளக்கு குப்பை தொட்டி அமைத்தல் புதிய தார் சாலை கழிவறை உயர்கொண்டான் ஆற்றில் படித்துறை நடுத்தெருவில் புதிதாக கட்டப்பட்ட பாலத்திற்கு படித்துறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்கு பிப்ரவரி 1தேதி முதல் நாச்சிகுறிச்சி பஞ்சாயத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி பிப்ரவரி 20ல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது முடிவில் தோழியர் D நிர்மலா நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.