திருச்சி பன்னாட்டு விமானநிலை குழு உறுப்பினர்கள் கூட்டம்
திருச்சி, ஜன.31 திருச்சி பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. விமான நிலைய குழுவின் தலைவரும், திருச்சி மாநகர காவல் ஆணையருமான சத்யப்பிரியா தலைமையில் விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணி முன்னிலையில் திருச்சி பன்னாட்டு விமான நிலைய கூட்ட அரங்கில் நடத்தப்பட்டது.
இந்த குழுவில் விமானநிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்பு படை, குடியேற்ற பணியகம், சுங்கத்துறையினர், உளவுத்துறை பணியகம், சிறப்பு பணியகம், திருச்சி, மக்கள் தொடர்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகளை உறுப்பினர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்களின் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர்களை கொண்டு இக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை மற்றும் விமான கடத்தல் தடுப்பு ஒத்திகை சம்பந்தமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.