மென்பொறியாளர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
திருச்சி பிப் 15 கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை சிடிஎஸ் மென்பொருள் நிறுவனத்தில், மென்பொறியாளராகவீட்டில் இருந்தபடியே பணிபுரிபவர் ஷேக்தாவூத் (37).
திருச்சி பீமநகர், நியூ ராஜா காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று காலை சென்னையிலிருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஷேக்தாவூத் ஐஎஸ்ஐஎஸ் அனுதாபியா என கூறப்படுகிறது. மேலும்,மத மாற்றம் செய்வதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என கூறப்படுகிறது.