ஓமாந்தூர் மஹா சிவராத்திரி முன்னிட்டுயை சாலை அமைக்கும் பணி தீவிரம்
திருச்சி, பிப்.15 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் ஓமாந்தூர் மஹா சிவராத்திரி திருவிழா பண்டிகை முன்னிட்டு( 18.02.20123) திருவெள்ளரை முதல் ஓமாந்தூர் வரை செல்லும் மாவட்ட இதர சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. திருச்சி கோட்டம் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் கேசவன், லால்குடி உதவி கோட்டப் பொறியாளர் பாலசுந்தரம், மண்ணச்சநல்லூர் உதவிப் பொறியாளர் கஜலட்சுமி ஆகியோர்களின் மேற்பார்வையில் சாலை ஆய்வாளர் மற்றும் சாலைப் பணியாளர்கள் செய்து வருகின்றனர். சாலை ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சீமை கருவேல முள் மரங்கள், சாலையை ஒட்டியுள்ள செடிகள் மற்றும் தேவையற்ற மண் குவியல்களை அகற்றி வருகின்றனர். திருவெள்ளரையிலிருந்து சாலப்பட்டி, வீராணி, சிறுகுடி ஆகிய கிராமங்கள் வழியாக ஓமாந்தூர் வரை உள்ள ஒன்பது கிலோமீட்டர் தார்ச்சாலையை சீரமைத்து வருவது கண்டு பொது மக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்காக திருச்சி மாவட்ட நிர்வாகத்திற்கும் திருச்சி கோட்ட நெடுஞ்சாலைத் துறையினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.