ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

0 727
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வி.ஏ சமுத்திரம் ஊராட்சி தலைவராக இருப்பவர் வசந்தா தேவி ஊராட்சியில் மொத்தம் 6வார்டுகள் உள்ளன
ஊராட்சியில் தலைவராக இருங்கும் வசந்தாதேவி.
எந்த முடிவுகளையும் வார்டு உறுப்பினரிடம் ஆலோசிகாமல் சுயமாக முடிவெடுத்து செய்வதாகவும் ஊராட்சியில் உள்ள எந்த வார்டிற்கும் எந்தவித அத்தியாவசியமான தேவைகளான குடிநீர் மற்றும் தெருவிளக்கு பிரச்சனைகளை கடந்த 2 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் இருப்பதாகவும் வார்டு உறுபினர்கள் கூறுகின்றனர் இதனால் தங்களால் ஓட்டளித்த மக்களின் குறைகளை நிறைவேற்றி தர முடியவில்லை என
வார்டு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து வார்டு உறுபினர்களான
ரேவதி.கலைமணி.ராணி.சரன்ராஜ் ஆகியோர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மனு அளித்துள்ளனர் இதனால் வி.ஏ சமுத்கிரம் ஊராட்சி மக்களிடையே சற்று பரபரப்பு நிலவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.