விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி சாவு
திருச்சி, பிப்.15 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வாத்தலை அர்ஜுன தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சாமிநாதன் (35). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 14 வருடங்கள் ஆகிறது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த நான்கு மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சாமிநாதன் கடந்த 9 ஆம் தேதி வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கவனித்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை காவல்துறையினர் சாமிநாதன் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.