சமயபுரத்தில் பக்தரின் மோட்டார் பைக் மாயம்

0 379
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தரின் மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருச்சி மேல அம்பிகா புரம் கோல்டன் நகர் முத்து செட்டி தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன்.இவரது மகன்  குணசேகரன்(22). இவர் தனது பஜாஜ் பல்சர் பைக்கில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். அங்குள்ள கோயில் வளாகத்தில் நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் தரிசனம் முடித்துவிட்டு திரும்பி வந்த பார்த்தபோது மோட்டார் பைக் மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் மோட்டார் பைக்கை திருடி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சமயபுரம் காவல்நிலத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.