ரவுடிகள் மீதான துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல: மாநகர காவல் ஆணையர் விளக்கம்
திருச்சி, பிப்.20 திருச்சியில் இரண்டு ரவுடிகள் விசாரணைக்காக அழைத்து சென்ற போது காவல்துறை வாகனத்தை கவிழ்த்து தப்பித்துடன் காவல்துறையினரை கத்தியால் வெட்டினார். இதையடுத்து காவல்துறையினர் தற்காப்பிற்காக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகளை பிடித்தனர். இதையடுத்து கூடுதல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ரவுடிகள் மற்றும் காயமடைந்த காவல்துறையினரை மீட்டனர். -இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியா சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சுடப்பட்ட குற்றவாளிகள் இருவர் மீதும் பல்வேறு காவல்நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. – ரவுடிகள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தனர். – இந்நிலையில் திருச்சியில் நடந்த ஒரு நகை கொள்ளை சம்பவம் தொடர்பாக அவர்கள் இருவரும் இன்று விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர். அப்போதுதான் இச்சம்பவம் நடைபெற்றது.
விசாரணைக்காக கைது செய்து குற்றவாளிகளை போலீசார் அழைத்துச் செல்லும் பொழுது காவல்துறையினரை தாக்கும் குற்றவாளிகளுக்கு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கை.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. இது போன்ற பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருக்கும் குற்றவாளிகளை கைது செய்து வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என்கிற நோக்கில் தான் காவல்துறையினரும் தீவிரமாக புலன் விசாரணை செய்கிறார்கள். – ஆனால் தங்களது உயிருக்கு தற்காப்பு ஏற்படுத்திக் கொள்வதற்காக அவர்களை சுட வேண்டிய சூழல் காவல்துறையினருக்கும் உருவாகிறது. கஞ்சா போன்ற போதை பொருட்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்ந்து கைதாகும் குற்றவாளிகளின் மீது இது போன்ற நடவடிக்கை இருக்குமா என்கிற கேள்விக்கு? இது அவர்களுக்கும் ஒரு எச்சரிக்கை என்று எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினார்.