திருச்சிராப்பள்ளி வளர்ச்சிக்குழுமம் சார்பில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையரிடம் மனு
திருச்சி, பிப். 20 திருச்சிராப்பள்ளி வளர்ச்சிக்குழுமம் தலைவர் வழக்குரைஞர் திருச்சி திலீப், செயலாளர் யோகா விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் கமலக்கண்ணன், துணைத் தலைவர்கள் மல்லேஸ்வரி, அனிதா, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி குழு ஒருங்கிண்பபாளர்கடள வெண்ணிலா, முழுமதி, மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி குழு ஒருங்கிணைப்பாளர் வலையூர் சேட்டு, மருத்துவ சேவை அணி ஒருங்கிணைப்பாளர் தேவி, சங்கத்தின் பி.ஆர்.ஓ. வழக்குரைஞர் கவிஞர் கண்ணன் மற்றும் 70க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். தொடர்ந்து மாநகராட்சி பூங்காவில் நடைபெற்ற சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சியின் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்,மேயர் அனைத்து துறை அரச அலுவலர்களை சந்தித்து அந்தந்த துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை அளிப்பதும் என்றும் மேற்கண்ட மக்கள் பிரதிநிதிகள், துறை அதிகாரிகளை கலந்து கொள்ளும் நிகழ்வை (புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கும் விழாவாக) நடத்தி அக்கூட்டங்களில் சில திட்டத்தை அவர்களே அறிவிக்க செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
