கல்லக்குடி பேரூராட்சியில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி

0 364
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றுயத்தில் உள்ள கல்லக்குடி பேரூராட்சியில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியின் முடிவில்
டால்மியா பாரத் பவுண்டேஷன் மூலம் கோவாண்டாகுறிச்சி பகுதியில் 67 நபர்களுக்கு தலா 10 நாட்டு கோழிக்குஞ்சுகள் கோவண்டாகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் திருமதி வியாகுல ஈஸ்வரி ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து வடுகர் பேட்டையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 8 நபர்களுக்கு நாட்டுகோழி குஞ்சுகள் வழங்கினார்.

மேலும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் செல்வி கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர் இதனை தொடர்ந்து கல்லக்குடி பேரூராட்சியில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 25 பயனாளிகளுக்கு தலா 10 நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் கலந்து கொண்டு நாட்டுகோழிக்குஞ்சுகளை வழங்கினார் மேலும் வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் இதன் மூலம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வாழ்வாதாரம் உயரும் நோக்கத்திற்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது மேலும் நிகழ்ச்சியில் டால்மியா பாரத் பவுண்டேஷன் மேலாளர்  நாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் ம இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை டால்மியா பாரத் பவுண்டேசன் அலுவலர் பிரித்விராஜ் சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.