பொதுக் கழிப்பிடங்கள் குறித்து புகார் தெரிவிக்க கியூ.ஆர்.கோடு பொருத்தம்

0 367
Stalin trichy visit

திருச்சி, பிப். 21 காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல் அமீது அறிவுரையின் படி சமுதாய மற்றும் பொது கழிப்பிடங்கள் குறித்த கருத்துகள் மற்றும் புகார்கள் தெரிவிக்க கழிப்பிடங்களில் கியூ.ஆர்.கோடு பொருத்தப்பட்டது.
பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண்குராலா மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார். ஆகியோரின் ஆணையின்படி திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் செயல் அலுவலர் ச.சாகுல் அமீது அவர்களின் தலைமையிலும், மன்ற தலைவர் சு.சங்கீதா மற்றும் துணைத்தலைவர் சி.சுதா ஆகியோரின் முன்னிலையிலும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க தொடர்பாக பேரூராட்சிக்கு சொந்தமான கழிப்பிடங்களின் செயல்பாடுகள், பராமரிப்பு, தூய்மை ஆகியவற்றை பற்றி கருத்துகளையும், புகார்களையும் பொதுமக்கள் எளிதாக தங்களது அலைபேசி மூலம் அளிப்பதற்கு ஏதுவாக பேரூராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையம் வடபுறம், வாரசந்தை, மேற்கு தவிட்டுப்பாளையம் ஆண்கள் மற்றும் பெண்கள், ஸ்ரீராமசமுத்திரம் செல்லும் பாதையில் பிள்ளையார் கோவில் அருகில், தெற்கு அக்ரஹாரம், மாலதிநகர், மேற்கு தவிட்டுப்பாளையம் காலனி, கீழமஞ்சமேடு, பாரதியார் தெரு, மல்லான் கோவில், பேருந்து நிலையம் தென்புறம், புதுத்தெரு பிடாரியம்மன் கோவில் அருகில் (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய இடங்களில் உள்ள 14 சமுதாய கழிப்பிடங்கள் மற்றும் பேருந்து நிலையம், பாரதியார் தெரு ஆகிய இரு இடங்களில் உள்ள பொது கழிப்பிடங்களில் கியூ.ஆர்.கோடு வைத்து பொதுமக்களிடம் அறிமுகப்படுத்தி பொதுமக்கள் இந்த -னை அலைபேசியின் மூலம் ஸ்கேன் செய்து அதில் வரும் லிங்கின் பயன்படுத்தி கழிப்பிடத்தினை பற்றிய கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர் இராஜேந்திரன், துப்பரவு பணிமேற்பார்வையாளர்(பொ) கண்ணன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.