திருச்சி மாநகர காவல்நிலையங்களில் காவல்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு

0 318
Stalin trichy visit

தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் சங்கர் இன்று திருச்சி மாநகரத்தில் உள்ள கண்டோன்மென்ட் மற்றும் தில்லைநகர் ஆகிய காவல் நிலையங்களை பார்வையிட்டு அங்கு வரவேற்பாளர்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்தார்.

பின்னர் மாநகர காவல் ஆணையரக கூட்ட அரங்கில் நடந்த பாரி குற்ற வழக்குகளான ஆதாயக்கொலை, கொலை,வழிப்பறி, கொள்ளை பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

அதற்குப்பின் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தியதோடு திருச்சி மாநகரில் ஜனவரி மாதத்தில் பதிவான திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து வழக்கின் சொத்துக்களை மீட்டு தந்த 3 ஆய்வாளர்கள் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 18 காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.