காவிரி பாலம் திறக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை
காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து திறக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை – திருச்சி மாநகர மக்களின் கோரிக்கையை ஏற்று மிக விரைவில் பாலம் திறக்கப்படும் ….
திருச்சி நகரின் மிக முக்கிய அடையாளமாகவும்,மாநகரின் போக்குவரத்திற்கு மிகவும் அவசியமாகவும் உள்ள காவேரி பாலம் கடந்த 1976ம் ஆண்டு திறக்கப்பட்டது – ஸ்ரீரங்கம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தை இணைக்கும் மிக முக்கிய பாலமாக விளங்கும் இந்த பாலத்தின் சிரத்தன்மை குறைந்ததால் பலமுறை பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் பாலத்தின் சிரத்தன்மை மிகவும் பழுதடைந்த வருவதால் இதற்கு மாற்று வழி புதிய பாலத்தை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டது – புதிய பாலத்தை கட்டுவதற்கு முதற்கட்டமாக நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்
கே.என் நேரு தெரிவித்திருந்தார் – அதற்கு இடைப்பட்ட காலத்தில் பாலத்தை முழுவதுமாக அடைத்து பராமரிப்பு செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது – இதன் அடிப்படையில் கடந்த
நவம்பர் மாதம் மூடப்பட்டு பராமரிப்பு பணிகளுக்காக ரூபாய் 6.87 கோடி ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தியே நகருக்குள் நுழைய வேண்டிய சூழலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் தள்ளப்பட்டதன் காரணமாக தினமும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகின்றனர் – மேலும் எப்போது காவிரி பாலம் மீண்டும் திறக்கப்படும் என்கிற என்னம் கோட்டை மாநகர மக்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்நிலையில் காவிரி பாலத்தில் பயணம் செய்தவாறு காவிரி பாலம் திறக்கப்பட்டது யாரும் சிரமப்பட வேண்டாம் என இளைஞர்கள் சிலர் whatsappபில் வெளியிட்டுள்ள வீடியோவால் திருச்சி நகர் மக்கள் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் குழப்பம் அடைந்து வருகின்றனர் – ஆனால்
பராமரிப்பு பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் காவிரி பாலத்தில் பயணிக்க வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது -ஏறத்தாழ முழுவதுமாக பணிகள் முடிக்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் சில தினங்கள் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது