ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்தவர்களை காப்பாற்றிய அப்போலே மருத்துவமனை

0 319
Stalin trichy visit

ஜல்லிக்கட்டு போட்டியில் காளை மாடு முட்டியதில் காயமடைந்தவர்களை காப்பாற்றிய அப்போலோ சிறப்பு மருத்துவமனை திருச்சி.

சம்பவம்|

கடந்த 16.01.2023 மதியம் 2 மணியளவில் 28 வயது இளைஞர் சூரியூர் மஞ்சுவிரட்டில் காளை மாடு முட்டியதில் படுகாயமடைந்து திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு வலதுபக்க மார்புப்பகுதியில் பெரிய காயத்துடன் விலா எலும்புகள் உடைந்து (paradoxical breathing)பாரடாக்ஸிகள் பிரீதிங் என்ற நிலையில் இருப்பதை தீவிரசிகிச்சை பிரிவு Dr. ஸ்டீபன் மற்றும் மருத்துவ குழுவினர் கண்டறிந்தனர். (paradoxical breathing – Breathing movements in which the chest wall moves in on inspiration and out on expiration, in reverse of the normal movements)

மேலும் இவருக்கு வலது நுரையீரலில் 8 செ.மீ அளவு சிதைவு, மூச்சு காற்று கசிவு மற்றும் இரத்தக்கசிவு, 4,5,6,7 ஆகிய விலாஎலும்புகள் முறிந்த நிலையில் 5 ஆம் விலாஎலும்பு நுரையீரலை குற்றியநிலையில் இருந்ததை CT ஸ்கேன் மூலம் கண்டறிந்தனர்.

Dr. அரவிந்த் கல்யாணசுந்தரம் மற்றும் ஸ்ரீகாந்த் பூமனா இருதயம் மற்றும் நுரையீரல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் மற்றும் Dr. ரோகினி மற்றும் சரவணன் இருதயம் மற்றும் நுரையீரல் மயக்கவியல் நிபுணர் ஆகியோரால் இவரை உடனடியாக அவசர அறுவைசிகிச்சைக்கு எடுக்கப்பட்டு இவருக்கு காயத்தினால் ஏற்பட்டு மூச்சு காற்று கசிவு, இரத்த கசிவு, முறிந்த விலா எலும்புகளை சரிசெய்து நுரையீரல் மேலுள்ள மென்மையான திசுக்களை சரிசெய்தனர்.

அறுவைசிகிச்சைக்கு பின்னர் இவரை தீவிரசிகிச்சை பிரிவு மருத்துவர்கள் கண்காணிப்பில் Dr. அரவிந்த் கல்யாணசுந்தரம் மேற்பார்வையில் வெகுவாக உடல்தேறிய நிலையில் எவ்வித தொற்றும் இல்லாமல் வீடுதிரும்பினார் மேலும் மிகுந்த நலத்துடன் இருமுறை Dr. அரவிந்த் கல்யாணசுந்தரம் வெளிநோயாளிக்கான ஆலோசனை பெற்றுச்சென்றார்.

சம்பவம் ||

கடந்த 17.01.2023 இரவு 8:30 மணியளவில் 34 வயது இளைஞர் மஞ்சுவிரட்டில் காளை மாடு முட்டியதில் படுகாயமடைந்து திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு இடது பக்க மார்புப்பகுதிமற்றும் வயிற்றுப்பகுதியில் பெரிய காயம் இருப்பதை Dr. ஸ்டீபன் உறுதி செய்ததுடன் CT ஸ்கேன் செய்ததின் மூலம் (diaphragm) டயபிரகம் எனப்படும் மார்புவயிற்றிடை பகுதியில் குடலிறக்கம் மற்றும் காயம் இருப்பதை கண்டறிந்தார்.

Dr. விஜய் கணேசன் வயிறு மற்றும் குடலுக்கான சிறப்பு அறுவைசிகிச்சை நிபுணரால் உடனடியாக அவசர அறுவைசிச்சைக்கு உட்படுத்தப்பட்டு லாப்ரோடோமி (Laparatomy) அறுவைசிகிச்சையை செய்தனர். மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு உடல்தேறி வீடுதிரும்பினார்.

பின்னர்

காயத்தினால் ஏற்படும் உதரவிதான குடலிறக்கம் (Diaphragmatic Hernia)பொதுவாக கண்டறியப்படாமல் இருப்பதிற்க்கான வாய்ப்புகள் அதிகமான நிலையில் இதனை கவனமாக கண்டறிந்து சிகிச்சையளித்து குறிப்பிடத்தக்கது.

திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் நுரையீரல் பிரச்சனைகளுக்கு தேவைப்படும் அனைத்து அறுவைசிகிச்சைகளை (விபத்தினால் ஏற்படும் நுரையீரல் காயம், புற்றுநோய்க்கான நுரையீரல் அறுவைசிகிச்சை) மேற்கொள்வதற்கு தேர்ச்சிபெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கருவிகளை கொண்டுள்ளது, மேலும் வாட்ஸ் (VATS – Video Assisted Thoracic Surgery)எனப்படும் நுண்துளை மூலம் அறுவைசிகிச்சை செய்யப்படுவதால் நோயாளிக்கு குறைந்த வலி, விரைவில் வீடுதிரும்புதல் மற்றும் இயல்புநிலைக்கு திரும்புதல் போன்ற பலன்கள் கிடைக்கிறது.

இம்மருத்துவமணியில் இந்த (VATS Video Assisted Thoracic Surgery) எனப்படும் நுண்துளை அறுவைசிகிச்சை மூலம் பலநோயாளிகளுக்கு விபத்தினால் தேவைப்படும் நுரையீரலில் பகுதியை அகற்றுதல், புற்றுநோய்க்கான நுரையீரல் அறுவைசிகிச்சை போன்ற அறுவைசிகிச்சைகளை மேற்கொண்டு மிகுந்த நலத்துடன் உள்ளனர் என்பதை இருதயம் மற்றும் நுரையீரல் அறுவைசிகிச்சை நிபுணர் ஸ்ரீகாந்த் பூமனா மற்றும் Dr. அரவிந்த் கல்யாணசுந்தரம் கூறினர் மேலும் இவர்களுக்கு உதவுவதற்கு மயக்கவியல் நிபுணர்கள், நுரையீரல் மருத்துவ நிபுணர்கள், தீவிரசிகிச்சை மருத்துவர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் உள்ளனர் என கூறினர்.

Dr. சிவம் மருத்துவ நிர்வாகி கூறுகையில் இதுபோன்ற விபத்தினால் ஏற்படும் காயங்களை முதல்கட்ட நிலை மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சையில் மிகுந்த கவனத்துடன் இருப்பதின் அவசியம் மற்றும் அதன் மூலம் மருத்துவரால் கண்டறியப்படும் சிக்கல்களுக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் சிறப்பு மருத்துவர்கள் கொண்டு விரைந்து சிகிச்சை அளிக்கும் வகையில் திருச்சி அப்போலோ மருத்துமனை அமைந்துள்ளது இதன் சிறப்பு என தெரிவித்தார்.

திரு. சாமுவேல் மருத்துவமனை மூத்த பொதுமேலாளர் மேற்சொன்ன அறுவைசிகிச்சைகளை செய்த மருத்துவர்கள் மற்றும் உடனிருந்த மற்ற மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் அனைவரையும் பாராட்டினார். டெல்டா மாவட்டத்தில் NABH அங்கீகாரம் பெற்ற ஒரே பல்நோக்குமருத்துவமனை என்பதையும், இந்த NABH அங்கீகாரமானது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை திட்டமிடல் போன்றவற்றவைகளை நோக்குவதோடு நோக்குவதால் உலகத்தர சிகிச்சை அளிக்க வழிவகைசெய்கிறது இதனால் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு எவ்வித தொற்றுமின்றி விரைவில் குணமடைந்து வீடுசெல்கின்றனர்.

திருச்சி மாநகரம் மற்றும் டெல்டா மாவட்டத்தில் தேவைப்படும் அனைத்து மருத்துவ தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையில் இம்மருத்துவமனை அமைந்துள்ளது எனவும் கூறினார்.

பொதுமேலாளர்சங்கீத் ராமமூர்த்தி.  மற்றும் விற்பனைப்பிரிவு மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் நன்றி கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.