புள்ளம்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நான்கு வகுப்புகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 540 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர. இந்த பள்ளிக்கு கூடுதலாக வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அந்தப் பகுதி மக்களும் ஆசிரியர்களும் தொகுதி எம்எல்ஏ சௌந்திரபாண்டியனிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் குழந்தைகள் நலநேய திட்டத்தில் ரூ 65 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் உட்பட நான்கு வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்காக பூமி பூஜை தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் ஒன்றிய குழு தலைவர் ரஷ்யா கோல்டன் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், மாதவன் புள்ளம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் ஆலீஸ் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சி எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் கலந்துகொண்டு புதிய வகுப்பறை கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி ஆசிரியர்களிடம் பள்ளி குழந்தைகள் பற்றியும் பள்ளி தேவைகளை குறித்தும் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் விமலா, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் இந்திரா காந்தி, ஒன்றிய பொறியாளர்கள் விமல்ராஜ், ரங்கநாதன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், தன்னார்வலர்கள்,பள்ளி மாணவ, மாணவிகள் பேரூராட்சி பகுதி மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.