வனத்தாயி அம்மன் பூத வாகனத்தில் புறப்பாடு

0 451
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் கள்ளி வனத்தாயி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது.
விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல், புனித நீர் எடுத்து வருதல், அம்மனுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள்
நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யபட்டது.
அப்போது மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், தொழில் வளம் பெருகவும், உலக மக்கள் நோய் நொடியின்றி நலமுடன் வாழவும், பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர்.
அதனை தொடர்ந்து பூத வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் முக்கிய வீதி வழி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.