தூர்வாரும் பணிகளில் புகார் வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம் – பொதுப்பணித்துறை கூடுதலை தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா பேட்டி
திருச்சி மாவட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளை பொதுப் பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அந்தவகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுடன் நவல்பட்டு பகுதியில் நடைபெறும் காட்டாறில் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அதில்தமிழ்நாடு அரசு நீர்வள ஆதார துறை மூலம் கடந்த மாதம் 17ஆம் தேதி காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிக்காக திருச்சி மண்டலத்தில் 589 பணிகளுக்கு ரூபாய் 62.90 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் நாமக்கல், ஈரோடு, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர்,கடலூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகள், வாய்கால்களில் முட்செடிகளை அகற்றுவதன் மூலம் தண்ணீர் கடைமடை வரை எளிதாக சென்று பாசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணை திறப்பு குறித்து தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.தூர்வாரும் பணிகள் ABC என மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில் முதலில் நீர் பாசனம் பெறும் A பகுதிக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் தொடங்கப்படும். அதனைத் தொடர்ந்து BC பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படும். டெல்டா மாவட்டத்தில் நடப்பாண்டில் 78 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்காக சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் நாற்று நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.எனவே குறிப்பிட்ட காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும். மேட்டூரில் தற்போது 91 அடி நீர் உள்ளது. நீர் திறப்புக் கான பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறோம். தூர் வாரும் பணிகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் சரியான முறையில் நடைபெற்று வருகிறது.ஆண்டுதோறும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகளுக்கு தடையின்றி பாசன வசதி பெற வேண்டும் என்பதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை நான் அரசியலாக்க விரும்பவில்லை. தூர்வாரும் பணிகள் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வருகிறது. இதில் ஏதேனும் இருந்தால் அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கலாம் என்றார். முக்கொம்பு புதிய பாலம் கட்டும் பணி இன்னும் நான்கைந்து மாதங்களில் நிறைவு பெறும் என்றார்.