முசிறியில் இன்ஸ்பயர் லைன் சங்கம் சார்பில் பயணிகள் நிழற்குடை திறப்பு

0 277
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் முசிறியில் முசிறி இன்ஸ்பயர் லைன் சங்கம் சார்பில் பயணிகள் நலன் கருதி நிழற்கூடம் மற்றும் அன்பு சுவர் அமைக்கப்பட்டது இதனை லைன் சங்க ஆளுநர் கே பி கே சேது சுப்பிரமணியன் தலைமை வகித்து திறந்து வைத்தார். இந்நிகழ்விற்கு மாவட்ட முதல் பெண்மணியை ரஞ்சிதம் சேது சுப்பிரமணியன் லைன் முக்கிய நிர்வாகிகள் செல்வராஜு சிவ ராமகிருஷ்ணன் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர் லயன் சங்கத் தலைவர் பல்லவித்துறை என்கிற லோகேஸ்வரன் காமராஜ் பாலச்சந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .இந்த ஆண்டை ஆனந்தம் ஆண்டாக லயன் சங்கத்தினர் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பயணிகள் நிழற்குடையை ஆளுநர் சேது சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் இந்நிகழ்வில் ஏராளமான முசிறி இன்ஸ்பயர் லைன் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.அன்பு சுவரில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள் உடைகள் ஆகியவற்றை ஏழை எளியோர் தங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்துச் சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.