பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் பெண் போராட்டம்
திருச்சி, பிப்.27 திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், பைத்தம்பாறை, செட்டியார் தெருவைச் சேர்ந்த அரங்கராஜன் மனைவி ஆர்.சரஸ்வதி இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கையில் கோரிக்கை மனுவுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அம்மனுவில் எனது கணவர் அரங்கராஜன், கோவிந்தசாமி என்பவரிடம் கிரையம் செய்து பெற்ற நிலத்திற்கு (நஞ்சை) பட்டா வழங்காமல் எங்களை அலைய விடுகின்ற கிராம நிர்வாக அலுவலர் எங்களிடம் லஞ்சம் எதிர்பார்த்தார். அது கிடைக்காததால் அவர் அந்த இடத்தை தற்போது கிராம தலைவர் மூலம் பொக்லைன் எந்திரம் மூலம் நிலத்தில் இருந்து மரங்களை வெட்டி அருகிலுள்ள வாய்காலில் தள்ளிவிட்டனர். நான் இதை தடுக்க முயன்ற போது என்மீது வாகனம் ஏற்றி கொலை செய்ய முயன்றனர். எனவே சம்பந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது நிலத்திற்கு பட்டா வழங்க உத்தரவிட கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்து காவல்துறையினர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.