திருச்சி மாவட்டத்தில் 91.5 சதவீத ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி – மாவட்ட நிர்வாகம் தகவல்

0 404
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் பணியாற்றும் 91.5 சதவீத ஆசிரியர்கள், 86 சதவீத ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 9 ஆயிரத்து 400 ஆசிரியர்களும், 1,480 பணியாளர்களும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் 4 ஆயிரத்து 557 ஆசிரியர்கள், 1,162 பணியாளர்களும், 2 தவணை தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர்.

இதன்படி திருச்சி மாவட்டத்தில் 1ஆம் தேதி திறக்கப்பட உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 91.5 சதவீதம் ஆசிரியர்களும், பணியாளர்களின் 86 சதவிகிதமும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு உள்ளனர். இன்னும் 876 ஆசிரியர்கள், 241 பணியாளர்கள் , தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது,மேலும் 184 ஆசிரியர்கள் மற்றும் 52 பணியாளர்களுக்கு இதில் விலக்கு அளிக்கபட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.