காந்தி மார்க்கெட் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை – போலீசார் அதிரடி

0 449
Stalin trichy visit

திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் பாலக்கரை பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாக காந்தி மார்கெட் காவல் நிலைய போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் அந்தந்த காவல் சரக இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்,இந்நிலையில் காந்தி மார்க்கெட் மற்றும் பாலக்கரை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்தாக பாபு, ராஜா, வீரபாண்டி, இளையராஜா ,சுதர்சன் குமார், வேல்முருகன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, லாட்டரி சீட்டு விற்றதற்கான துண்டுச் சீட்டும்,பணமும் பறிமுதல் செய்யப்பட்டது – மேலும் எவ்வளவு நாட்களாக இந்த லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர், இவர்களுக்கும் வேறு பகுதியில் உள்ள மற்றவர்களுக்கும் தொடர்பு உடையதாக போன்ற பல கோணங்களில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.