மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இருவர் கைது

0 427
Stalin trichy visit

நேற்றிரவு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் மது போதையில் இருந்த இருவர் ஓட்டி வந்த சொகுசு கார் தறிகெட்டு ஓடி சாலையோரம் பிளாட்பார்மில் உறங்கிக் கொண்டிருந்த யாசகர்கள் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே மூவர் பலியாயினர்.

ஆயினும் விபத்தை ஏற்படுத்திய வாலிபர்கள் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றனர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் காரை விரட்டி பிடித்து போதையில் இருந்த இரு இளைஞர்களையும் தர்ம அடி கொடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடல்களை மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த நபர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய லட்சுமி நாராயணன் (வயது 23)அஸ்வந்த் (வயது 21)ஆகிய இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.