தென்னையில் காண்டமிருக வண்டிற்கு ஒருங்கினைந்த தடுப்பு முறை..

0 253
Stalin trichy visit

தென்னையில் காண்டமிருக வண்டிற்கு ஒருங்கினைந்த தடுப்பு முறையை விளக்கிய வேளாண் கல்லூரி மாணவன்

‍‍தமிழகத்தில் 2011-12 ஆம் ஆண்டு 430.7 ஹெக்டேர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதே ஆண்டில் 4515.6 மெட்ரிக் டன்கள் அளவிலான தென்னை சாகுபடி செய்யப்பட்டது.
‍‍இந்தத் தென்னை மரத்தில் காண்டமிருக வண்டின் தாக்கம் மிகுந்த வருவாய் இழப்பை ஏற்படுத்தும். இந்த வண்டினால் 10 முதல் 15% வரை மகசூல் இழப்பை ஏற்படுத்த வல்லது.
‍‍இத்தகை கொடிய வண்டைக் கட்டுப்படுத்தும் தடுப்பு முறைகள் பற்றி நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாண்வன் செல்வன் வே. மோகன் ராஜ் விளக்கினார்.

தடுப்பு முறைகள்:
1. தோப்பில் உள்ள அனைத்து இறந்த மற்றும் பூச்சியுற்ற தென்னை மரங்களை அழிக்க வேண்டும்.
2. பூச்சியின் முட்டை, இளம்புழு, புயூபா மற்றும் முதிர்ந்த வண்டினை அழிக்க வேண்டும்.
3. எரு குழிகளில் உள்ள வண்டுகளின் இளம்புழுவை அழிக்க 250 கிராம் நுண்ணுயிரி மெட்டாரைசியம் அனிசோபிளியே வை 750 மி.லி. தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
4. எரு குழிகளில் 0.1% கார்பாரில் தெளிக்க வேண்டும்.
5. மண் பானையில் 5 லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொண்டு, 1 கிலோ ஆமணக்கை நன்கு கலந்து, பானையைத் தோப்பில் ஏக்கருக்கு 5 வீதம் வைத்தால், வண்டுகள் கவரப்பட்டுக் கொல்லப்படும்.
6. இளநீர் பறிக்கும் பொழுது, கொக்கியைக் கொண்டு வண்டுகளைக் குத்தி எடுக்க வேண்டும்
7. கோடை மழையின் பொழுதும், மழைக் காலங்களிலும் ஒளிப் பொறி வைக்க வேண்டும்
8. தென்னைக் கன்றுகளுக்கு இலைகளுக்கு இடையில் 3 அந்துருண்டை போட வேண்டும்.
9. வேப்பங்கொட்டை தூளை மணலுடன் கலந்து தெளிக்கலாம்.
10. காண்டாமிருக வண்டு இனக்கவர்ச்சி பொறி வைக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.