நானோ யூரியா – வேளாண் மாணவர் செயல் விளக்கம்.
நானோ யூரியா – வேளாண் மாணவர் செயல் விளக்கம்.
கிரமத்தில் தங்கிப் பயிற்சிபெறும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெறும் நாளந்தா வேளாண் கல்லூரி மாணவர்கள், வேளாண் தொழில்நுட்பம் குறித்துச் செயல் விளக்கம் அளித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பா. பிரபாகரன் (இறுதியாண்டு மாணவன்) நானோ யூரியா பற்றி விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது, நானோ யூரியா திரவமானது நானோ தொழில்நுட்பம் சார்ந்த உரமாகும், இது பயிர்களின் நைட்ரஜன் தேவைகளை நிரப்புவதன் மூலம் அவற்றின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
பயன்கள் :
இதன் மூலம் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. இது இலைகளின் வழியாக வேர்களுக்கு சென்று பயிர்களுக்கு தேவையான தழைச்சத்தை கொடுக்கிறது. நானோ யூரியா மண், நீர் மற்றும் காற்று போன்றவற்றை மாசடையாமல் பாதுகாப்பதுடன் மகசூலையும் அதிகரிக்க செய்கிறது.