ஆங்கரையில் லாரி மோதி புதுமணத் தம்பதிகள் உயிரிழப்பு..

0 476
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரையில் மோட்டார் பைக் மீது லாரி மோதிய விபத்தில் புதுமணத் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

லால்குடி அருகே சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகநாதன் மகள் 32 வயதான ராகினி.
இருவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் சிறுவயலூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வீக ராஜன் மகன் 33 வயதான செந்தில்குமாருக்கும் கடந்த 22.8.2022 திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று தன்னுடைய தாய் வீட்டிற்கு விருந்துக்காக கணவருடன் சென்று விருந்து சாப்பிட்டு மீண்டும் தனது கணவர் வீட்டுக்கு லால்குடியில் இருந்து பெரம்பலூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனர்.

இந்நிலையில் இரவு 11 மணியளவில் லால்குடி அருகே ஆங்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திருச்சியில் இருந்து அரியலூருக்கு வந்த லாரி மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு உடல்கள் அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.