வழிதவறிய சிறுவர்களை பத்திரமாக மீட்ட காவல்துறையினர்

0 272
Stalin trichy visit

சமயபுரம் கூட்டத்தில் வழி தவறிய சிறுவர்கள். துரிதமாக செயல்பட்ட காவல்துறை. பெற்றோரிடம் சிறுவர்கள் ஒப்படைப்பு.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை காண வந்த இரண்டு சிறுவர்கள் வழி தவறி சென்று தவிர்த்தனர். சிறுவர்களை மீட்டு சமயபுரம் காவல் நிலையத்தில் தங்க வைத்த காவல்துறை துரிதமாக நடவடிக்கை எடுத்து பெற்றோருடன் ஒப்படைத்தனர்.

சத்தியமங்கலம் அனுமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜா செண்பகம் தம்பதியின் மகன் 8 வயதான ஹரிஷ். அதே பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மேகலா தம்பதியின் மகன் 8 வயதான மதன்ராஜ். இவர்கள் இருவரும் மூன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர். சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்செரிதல் விழாவை காண குடும்பத்துடன் வருகை தந்தனர் இந்நிலையில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் சிறுவர்கள் வழி தவறி நின்று தவித்து வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சிறுவர்களை சமயபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர் இதனை அடுத்து அவருடைய பெற்றோர்கள் பற்றி சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் விசாரணை செய்து துரிதமாக நடவடிக்கை எடுத்து பெற்றோரை கண்டுபிடித்தனர். பின்னர் சமயபுரம் காவல் நிலையம் வரவழைத்த போலீசார் காவல் ஆய்வாளர் கருணாகரன் உதவியாளர் முத்துசாமி ஆகியோரின் தலைமையில் சிறுவர்களை பெற்றோருடன் ஒப்படைத்தனர். கூட்டத்தில் வழி தவறிச் சென்ற சிறுவர்களை துரிதமாக செயல்பட்டு விரைவாக பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.