அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை

0 308
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோவிலில் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் தங்க கருட சேவை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுந்தரராஜபெருமாள் சேவித்தனர்.

லால்குடியை அருகே அன்பில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுந்தரராஜபெருமாள் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோயிலான இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் தங்க கருட சேவை விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை விழாவை முன்னிட்டு காலை சிறப்பு திருமஞ்சனமும், மாலை பொதுஜனசேவையும் நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர்.

இதனை தொடர்ந்து வருடத்திற்க்கு ஒருமுறை நடைபெறும் தங்க கருட சேவை விழாவையொட்டி சுந்தரராஜ பெருமாள் தங்க கருட சேவை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

முன்னதாக மாலை 6.30 மணிக்கு தங்க கருட வாகனத்தில் சுந்தரராஜ பெருமாளை பல்லாக்கில் தூக்கி கோவிலை சுற்றி திரீவீதிஉலா வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியத்தார்.

இந்நிகழ்ச்சியில் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், கீழஅன்பில், நடராஜபுரம், ஆதிகுடி, அரியூர், செம்பரை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.