ஸ்ரீ ஃபவுண்டேஷனின் முப்பெரும் விழா
திருச்சி குமாரவயலூர் இயங்கும் ஸ்ரீ ஃபவுண்டேஷன் சார்பில் சர்வதேச பெண்கள் தினம் – உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம் நான்காம் ஆண்டு துவக்க விழா என முப்பெரும் விழா நடந்தது .
நிகழ்வில் ஸ்ரீ ஃபவுண்டேஷன் நிறுவனர் மற்றும் தலைவர் பிடி அரிசி , ஸ்ரீ கிருஷ்ணய்யர் தலைமையில் நடந்தது,
மக்கள் சக்தி இயக்க மாநில துணை செயலாளர் ஆர்.இளங்கோ முன்னிலையில் நடந்தது.
சிறப்பு விருத்தினர்களாக திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி ,மாவட்ட அலுவலர் திருமதி கே.அனுசுயா , ரசிக ரஞ்சனா சபா, கெளரவ செயலாளர் திரு.என்.சேகர், திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் , திரு.சந்திரமோகன், சென்னை சமூக சேவகி புவனா வாசுதேவன், முள்ளிக்கரும்பூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி கீதா துரைராஜ், ஆகியோர் கலந்துக் கொண்டு சிறந்த சேவை செய்யும் மகளிர்களுக்கும் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருமதி டாக்டர் ராமேஸ்வரி நல்லுசாமி, திருமதி.சகுந்தலா சீனிவாசன், காவல் ஆய்வாளர் திருமதி. அஜீம் , திருச்சி நரிக்குறவர் கல்வி மற்றும் நல சங்கத்தின் தலைவர் திருமதி சீதா மகேந்திரன், மாற்று திறனாளிகள் நல ஆணையத்தின் உறுப்பினருமான திருமதி .கலையரசி , மகளிர் ஆட்டோ டிரைவர்கள், மகாத்மா காந்தி மருத்துவமனையின் பிணை அறை தூய்மையாளர்கள், மற்றும் நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரிவர்கள் அனைவரும் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம், வாழ்த்து உரை வழங்கினார்.
தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஸ்குமார் நன்றியுரை கூறினார்.