இளம்பெண்ணை ஏமாற்றிய வடமாநில இளைஞர் கைது…

0 310
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் பகுதியை இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கி விட்டு தப்பிச்சென்ற வடமாநில இளைஞர். ஒரு ஆண்டுக்கு பின் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகள் சினேகா (வயது 22 ) கடந்த 2 வருடத்திற்கு முன்பு சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பழமுதிர் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே கடையில் பணிபுரிந்த அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த குவாதர் அலி (வயது 22) சினேகாவை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் குவாதர் அலி சினேகாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கிப் பழகி உள்ளார். இதில் கர்ப்பமான சினேகா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால் குவாதார் அலி சினேகாவிடம் தெரிவிக்காமல் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் கர்ப்பம் அடைந்த சினேகா மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக அசாம் மாநிலத்தை சேர்ந்த குவாதார் அலி ஏமாற்றி கர்பமாக்கி விட்டார் என புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திருச்சி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் அருண்குமார் தலைமையில் தனிப்படையினர் குவாதார் அலியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஓராண்டுக்கு பின் அவர் சொந்த கிராமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் அஸ்ஸாம் மாநிலத்திற்கு சென்று குவாதர் அலியை கைது செய்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் குவாதார் அலியை திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒரு வருடம் கழித்து குற்றவாளியை அஸ்ஸாம் மாநிலத்திற்கு சென்று கைது செய்தது, சக காவல் உயர் அதிகாரிகளிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.