முன்விரோதத்தில் கத்தியால் குத்தியவர் கைது.

0 311
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் முன்விரோதம் மற்றும் தனது மகளை தவறாக பேசுகிறாயா என கையில் வைத்திருந்த கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

புள்ளம்பாடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் 57 வயதான சார்லஸ். அதே பகுதி சேர்ந்த 55 வயதான பாக்கியராஜ். இவர்கள் இருவரும் எதிரேதிரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சார்லஸ் என்பவர் தனது வீட்டு வாசலில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்வீட்டில் வசித்து வரும் பாக்யராஜ் என்பவர் தனது மகளைப் பற்றி தவறாக பேசுகிறாய் என சொல்லிக் கொண்டு தனது கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு சார்லஸை தாக்கி உள்ளார். இதில் சார்லஸுக்கு காயம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட அவர் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சார்லஸ் கொடுத்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்திய பாக்யராஜை கைது செய்தனர்.பின்னர் லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.