பத்திரிக்கை துறையை புகழ்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

0 250
Stalin trichy visit

திருச்சி கலையரங்கம் வளாகத்தில் அபிநயாஸ் கல்வி அறக்கட்டளை தொடக்க விழா நடந்தது. நிறுவன தலைவர் அல்லூர் சீனிவாசன் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சிறப்புரையில் என்னைப் பொறுத்த அளவில் பத்திரிகை துறை, வழக்கறிஞர் துறை இரண்டும் ஒன்றுதான். வழக்கறிஞர்கள் நீதிமன்றம் சென்று போராடி வாதாடி மக்களுக்கான உரிமைகளை பெற்று தருகிறார்கள். எங்களைப் போன்ற துறை சார்ந்த பணிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கலங்கரை விளக்கமாக பத்திரிகை துறை இருக்கிறது. நீங்கள் வெளியிடும் செய்திகளின் உண்மை தன்மையை அறிந்து கொண்டு அதை நெஞ்சில் ஏற்றி நாங்கள் சட்டமன்றம் சென்று வாதாடி உரிமைகளை பெற்று வருகின்றோம். ஆகவே இதை நான் ஒரு ஒருங்கிணைந்த வளாகமாகத் தான் பார்க்கின்றேன். மக்களின் உரிமைகள் என்னவென்று அதை எடுத்துச் சொல்லும் தலையாய பணியை செய்து வரும் உங்களை வாழ்த்துவதாக பேசினார்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி, நுகர்வோர் இயக்க தலைவர் மோகன், காங்கிரஸ் மாநில செயலாளர் வக்கீல் இளங்கோ மற்றும் பல்வேறு அமைப்பு பிரதிநிதிகள் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.