சுவர் இடிந்து விழுந்ததில் வாலிபர் உயிரிழப்பு.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே எதுமலையில் வீட்டின் மராமரத்து பணிகள் செய்து கொண்டிருந்தபோது சுவர் இடிந்து மேலே விழுந்ததில் வாலிபர் உயிரிழந்தார்.
மண்ணச்சநல்லூர் அருகே எதுமலை முஸ்லிம் தெருவில் ரஷ்யா பேகம் என்பவரது வீட்டில் மராமரத்து பணிகள் செய்து கொண்டிருந்தனர். இந்த பணியில் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் 27 வயதான தினேஷ் மராமரத்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக சுவர் இடிந்து தினேஷ் மேல் விழுந்தது. இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அளித்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.