திருச்சி மாவட்டம் அதவத்தூர் பள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 26). இவர் காந்திமார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று புத்தூர் நால்ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சக்திவேலிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர்கள் அரியமங்கலத்தை சேர்ந்த ரஷீத், சஞ்சய் மற்றும் 17 வயதுடைய சிறுவன் என தெரியவந்தது. இவர்கள் ஏற்கனவே கொள்ளிடம் ஒய்ரோடு சந்திப்பு மற்றும் உறையூர் சாலைரோடு ஆகிய இடங்களில் 2 பேரிடம் செல்போன் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.