கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் வருகை குறித்து ஆலோசனை கூட்டம்

0 296
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 24 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சிக்கு வரும் மார்ச் 26 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தரும் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தெற்கு மாவட்டம் சார்பில் சிறப்பான வரவேற்பளிப்பது என்றும், மேலும் தெற்கு புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட வட்ட கழகம், வார்டு மற்றும் கிளைக் கழகங்களில் கொடி ஏற்றியும், புதிய வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்த்து கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க அனைவரும் பாடுபடுவோம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.