திருச்சி மெயில் செய்தி எதிரொலி… ஆட்சியரின் முன்னெடுப்பில் அரசு மருத்துவமனையில் புதிய பேஃன்!..
திருச்சி.மார்ச்.30, திருச்சியிலுள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துமனை நான்காவது மாடி தளத்தில், எலும்புமுறிவு மற்றும் கை,கால் அறுவை சிகிச்சை தளத்தில் உள்ள மின்விசிறிகள் செயலிழந்து ஓடாமல் இருந்த செய்தியை திருச்சி மெயில் வெளியிட்டது. அதனைக் கண்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் ஒருமணி நேரத்தில் அத்தளத்திற்கு புதிதாக ஐந்து பேஃன்களை மாற்றித்தந்தார்.

திருச்சியிலுள்ள அரசு மருத்துவமனையில் பல்வேறு அவலங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் புதுத்தளத்தில் உள்ள நான்காவது மாடியில் Department of DVL இல் மின்விசிறிகள் பழுதடைந்து காணப்பட்டன, இதனால் கை, கால் எலும்பு முறிந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்கும் 15 நோயாளிகளும் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில்,

அந்த அறையில் உள்ள 9 மின்விசிறிகளில் ஒன்று மட்டுமே ஓடியது. இதனால் அந்நோயாளிகள் மேலும் சிரமமடைந்தனர், இதனைக் கண்ட நோயாளி ஒருவரின் பாதுகாவலர், இதனை அந்த மருத்துவமனையின் RM இடத்தில் இதனை எடுத்துச் சென்றார், அவரும் உடனே சரி செய்து தருகிறோம் என்று கூறி பத்து நாட்களாகியும் சரிசெய்யப்படவில்லை. இந்நிலையில், திருச்சி மெயில் சேனலில் இந்த செய்தி வேகமாகப் பரவி வந்தது. இந்த செய்தியைக் கண்ட திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் சரியாக ஒருமணி நேரத்தில் அத்தளத்திற்கு புதிதாக ஐந்து மின்விசிறிகளை மாற்றித் தந்தார். இதனால் அங்குள்ள நோயாளிகள் பெரும் மகிழ்ச்சியுடன் ஆட்சியருக்கும், செய்தி வெளியிட்ட திருச்சி மெயில் சேனலுக்கும் நன்றிகளைத் தெரிவித்தனர்.
