நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து…! போலீசார் தீவிர விசாரணை..!
ஏப்ரல்.02, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நன்னிமங்கலத்தில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. லால்குடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

நன்னிமங்கலம் பகுதியில் லால்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் லால்குடி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சேமித்து வைக்கின்றனர். இந்த குப்பை கிடங்கில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இது குறித்து லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலர் பிரபு வீரர்கள் விஜய் அமிர்தராஜ், சாகுல்ஹமீது, மனோஜ், மணிகண்டன், விஜய், பிரபு உள்ளிட்டோ சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். பின்னர் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்றும், மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? என விசாரணை செய்து வருகின்றனர்.