பார்வையற்றோர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

0 521
Stalin trichy visit

திருச்சி வண்ணாரப்பேட்டை சி.இ.உயர்நிலைப்பள்ளியில் மதுரம் மருத்துவமனையின் தலைமையில் செயல்படும் மதுரம் சுகாதாரம், கல்வி மற்றும் சேவா அறக்கட்டளை சார்பில் பார்வையற்றோர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் மதுரம் மருத்துவனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஐவன் மதுரம் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பார்வையற்றோர் குடும்பங்கள், மனநலம் குன்றிய குழந்தைகள் மற்றும் கொரோனா தொற்று நோய் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து நிற்கும் குடும்பங்கள் என பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் நாற்காலி பிண்ணுவதற்கான ஒயர்கள், ஊதுவத்திகள் அத்தியாவசிய பொருட்கள், இலவச கையுறைகள், முககவசம், சானிட்டைசர்கள் ஆகியன வழங்கப்பட்டது.

விழாவில் டாக்டர் ஷர்மிளி மதுரம் மருத்துவ சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு சம்பந்தமாக உரையாற்றினார். விழா முடிவில் தேசிய பார்வையற்றோர் பேரவையின் சார்பாக நினைவுப் பரிசு மதுரம் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ராஜன், செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.