தாய்-தந்தையை தவிக்க விட்ட பிள்ளைகள்; கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் விசாரணை

0 527
Stalin trichy visit

துறையூர் தாலுகா செல்லிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால்(91). இவரது மனைவி செல்லபாபு. இவர்களுக்கு ஒரு மகனும், நான்கு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் ராஜகோபால் தன் மகனுக்கு நிலத்தை எழுதிக் கொடுத்துள்ளதாக தெரிகிறது. வயது முதிர்ந்த தந்தை ராஜகோபால், தாய் செல்லபாபு ஆகியோரை மகன் சரிவர கவனித்து கொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த முதியவர் ராஜகோபால் வயது முதிர்வால் ஏற்படும் நோய் தொந்தரவு, குடியிருக்க வீடு இல்லாமல் தான் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும், தனது மகனுக்கு எழுதி கொடுத்த நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். இதையடுத்து கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சந்திரகுமார் மனு மீது விசாரணை செய்து நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.