வெளிநாடு கல்விச் சுற்றுலா செல்லும் அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு

0 245
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
தமிழக அரசு செலவில் வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்லவுள்ள எசனைக்கோரையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா  நடைபெற்றது.

, லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் 6 ஆம் வகுப்பு படித்த தாரேஷ்.பள் ளியில் செயல்படும் வானவில் மன்றத்தில் சேர்ந்து சென்னை யில் நடைபெற்ற மாநில அளவி லான போட்டியில் பங்கேற்று தேர்ச்சிப் பெற்றார்.

இதையடுத்து தாரேஷ், அரசு செலவில் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல தேர்வானார்.இந்த மாணவருக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளித் தலைமையாசிரியர்  மாவளவன் தலைமை வகித்தார். மாவட்டத் தொடக்க கல்வி அலு வலர் ஜோதிமணி, வட்டார கல்வி அலுவலர் பிரபு, இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங் கிணைப்பாளர் இளஞ்சேட் சென்னி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மணிகண்டன் வானவில் மன்ற மாவட்ட கருத்தாளுநர் ராஜ பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், ஊராட்சி மன்றத் தலை வர் சாந்தி நாராயணன், ஒன்றிய கவுன்சிலர் குணசீலன், லால்குடி அரிமா சங்கத் தலைவர் கலிய மூர்த்தி,செயலாளர் முத்தமிழ்செல் வன், வட்டார வள மைய ஆசிரி யர் பயிற்றுநர் தனலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியைகள் சக மா
ணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.