மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழவாளாடி அக்ரஹாரம் பகுதியில் உள்ள கே.என். நகரைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் 19 வயதான தனுஸ்ரீ இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் பிஎஸ்சி டி.எம்.எல்.டி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி கடந்த 5 நாட்களாக விடுமுறை விட்டு இருந்ததால் கீழவாளாடியில் உள்ள அவரது வீட்டிற்கு தனுஸ்ரீ வந்துள்ளார். கல்லூரியில் இன்று தேர்வு நடைபெறவுள்ளது கல்லூரிக்கு செல்ல விருப்பமில்லாத்தால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது அவரது தாய் மகளை நீண்ட நேரமாக காணவில்லை எனப் பார்த்த போது வீட்டின் அறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனûக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் தற்கொலை குறித்து லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.