சமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருத்தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் 9ம் தேதி சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது – நாள்தோறும் மகமாயி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார்.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற பூச்செரித்த விழாவை தொடர்ந்து சித்திரை தேரோட்ட விழா இன்று கோலாகலம்.
திருச்சி,பெரம்பலூர் அரியலூர் கரூர் புதுக்கோட்டை நாமக்கல் தஞ்சாவூர் சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்.
பால்குடம்,அலகு,
அக்னி சட்டி போன்ற நேரத்திகடனை செலுத்தும் பக்தர்கள் – சமயபுரம் மாரியம்மன் திருத்தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
சித்திரை தேரோட்டத்திற்கான கொடி ஏற்றம் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற்ற நிலையில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாரியம்மன் திருவீதி உலா வந்தார்.
தேரோட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் துவங்குகிறது – நேற்று காலை முதலே திருச்சி,பெரும்பலூர்,கரூர்,புதுக்கோட்டை, தஞ்சை,அரியலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அலகு,அக்னி சட்டி போன்ற நேர்த்திகடனை செலுத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுமார் 15 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர் – மாவட்ட காவல் துறை சார்பில் சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
– சமயபுரம் மாரியம்மன் திருத்தேரோட்டத்தை முன்னிட்டு இன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.